Monday, December 15, 2014

Heart touching Moment

இன்று மதிய உணவிற்காக கொழும்பிலுள்ள ஒரு கடைக்கு சென்றிருந்தேன், அங்கே 80 - 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பொல்லை ஊன்றிய படி கடைக்குள்ளே நுழைந்தார், எல்லா விதமான உணவுகளையும் ஒரு முறை நோட்டமிட்டார் எதையுமே தன்னால் வாங்க முடியாது என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிய சட்டைப் பையிலிருந்த 50 ரூபா ஒன்றை கையில் எடுத்தபடி எதோ ஒன்றை எதிர் பார்த்து நின்றார்.
அதை பார்த்த அந்த கடையின் முதலாளி அவரை நோக்கி வேகமாக வந்தார் வந்த வேகத்தில் "எலியட்ட யண்ட" என்று அவரை துரத்தி அடிக்க போகிறார் என நினைத்தேன்... முதலாளி அந்த முதியவரை பார்த்து புன்னகைத்தார், எல்லா உணவுகளையும் காட்டி எது வேண்டும் என்று கேட்டார் முதியவர் விரும்பிய கோழி புரியாணியை பணம் ஏதும் வாங்காது பார்சல் கட்டி கொடுக்குமாறு பணித்தார் மீண்டும் சிரித்த முகத்தோடு உள்ளே சென்று விட்டார்.
பார்சலை வாங்கி கொண்ட முதியவர் வெளியே போகும் போது அங்கே புற்று நோயாளிகளின் மருத்துவ தேவைக்காக வைக்கப் பட்டிருந்த உண்டியலில் தான் வைத்திருந்த 50 ரூபாவையும் போட்டு விட்டு சென்றார்..
கேட்டு வந்தார் என்பதற்காக அவரை ஏளனமாக நினைத்து ஏதோ ஒன்றை கொடுத்தனுப்பாமல் அவர் விரும்பியதை கொடுத்த அந்த "முதலாளி"
தன் இல்லாமையிலும் தனிடமிருந் 50 ரூபாவையும் அந்த உண்டியலில் போட்ட "முதியவர்"
இரண்டு பேரிலும் உணர்ந்து கொண்டேன் இன்னும் மனிதம் வாழ்வதை...
Outing with my friends to galle face. It was a very plasent day. We enjoyed lot and had some snacks :p :p

Thursday, October 21, 2010

Monday, April 26, 2010

Thursday, January 29, 2009

Thursday, September 6, 2007